Saturday, 7 March 2020

கொண்ட ரெட்டி

2020-மார்ச்சு:
ரெட்டியார்கள் பற்றி ஒரு வாரப் பத்திரிகையில் வந்த கட்டுரை!!    
 
உழவுத்தொழில் செய்து வாழ்ந்த தென்னகத்தின்குடி ஒன்று, உழவு பொய்த்தபோது ஏக்கப் பெருமூச்சில் பொசுங்கிப்போகாமல், அதுவரை அரிச்சுவடியே அறியாத உணவுத்தொழிலில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகிறது!ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மலைப்பகுதியில் விவசாயத்தில் வாழ்ந்த ஒரு பிரிவு ரெட்டியார்கள் 1750ம் ஆண்டுவாக்கில் தமிழகத்தின் தென்கோடிக்கு வந்தனர். நெல்லையை அடுத்துள்ள மூலக்கரைப்பட்டியில் கோட்டை கட்டி கூட்டுக் குடும்பமாகக் குடியேறினர். பூர்வாசிரம ஊர்ப்பெயரை தாங்கி கெண்டாபுரத்தார், ஈங்குலார், இருவரத்தார், நெல்லியார் என 22 பெயர்களில் அழைக்கப்பட்டனர்இவர்கள். சில நூறுபேராக இங்கு வந்தவர்கள் பல்கிப்பெருகி பக்கத்து ஊர்களிலும் பரந்தனர். இப்போது 36 ஊர்களில் மட்டுமே வசிக்கும் இவர்கள்தான் தமிழகத்துக்கே சோறு போடும் ஓட்டல் தொழிலில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளனர்!‘‘நாயக்கர் ஆட்சியில் இங்கு வந்த எங்கள் ஒவ்வொருவருக்கும் ஐம்பது, நூறு ஏக்கருக்குக் குறைவில்லை. திடீரென விவசாயம் வீழ்ந்தது. கொழும்பு சென்ற எங்கள் முன்னோர் சோடா வியாபாரத்தில் ஈடுபட்டனர். ஆங்கிலேயருடன் பங்குதாரர்களாக சேர்ந்து நடத்திய விம்டோ சோடாவுக்கு உலக யுத்தத்தின்போதுராணுவ கான்ட்ராக்ட் கிடைத்தது.இலங்கை மக்கள் சோடாவை மதுவோடு கலந்து குடித்து பழக்க ப்பட்டவர்கள். அதனால் வியாபாரம் சூடு ஆறவில்லை. மதுப்பிரியர்களின் மனங்கவர சைடு டிஷ் தயாரித்துக் கொடுத்தால் இன்னமும் சம்பாதிக்கலாம் என நினைத்தவர்கள், மாமன், மச்சான்களை இங்கிருந்து கூட்டிப்போய் சமைக்கச் செய்தனர். இப்படித்தான் கண்டி இடியாப்பம், யாழ்ப்பாண சொதி எல்லாம் எங்களுக்குக் கைவந்த கலையானது. ஸ்ரீமாவோ&சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி சொந்த ஊருக்கு துரத்தப்பட்டபோது சமையல்தான் கை கொடுத்தது’’ என்றார் மூலக்கரைப்பட்டிரகுபதி ரெட்டியார்.இலங்கையிலிருந்து திரும்பிய ரெட்டியார்கள் முதல் வேலையாக கண்கவரும் ஓட்டல்களைக் கட்டினர். இலங்கையில் சைடு டிஷ்ஷில் தொடங்கிய சமையல் சகாப்தத்தை தமிழகத்தில் புல் மீல்ஸுடன் தொடர்ந்தனர். சப்பாத்தியை சப்புக்கொட்டிக்கொண்டிருந்த தமிழர் நாவுகள், சிலோன் பரோட்டாவின் ருசி கண்டன. தேங்காய்ப்பாலின் மணம் கமழ்ந்த சொதிசொக்க வைத்தது. உப்பு, உறைப்பு குறைந்த வழக்கமான சமையலைவிட காரசார ஆந்திர பாணி சமையல் நம்மவர்களைக் கட்டிப்போட்டது.அதிவிரைவிலேயே தமிழகம் முழுவதும் 36 ஊர் ரெட்டியார்களும்கிளை விரித்தனர். தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலத்தவரும் ரெட்டியார் சாப்பாட்டுக்கு அடிமை ஆயினர். இலங்கையின் வாணி விலாசும், துபையின் அபிராமி ஓட்டலும் ரெட்டியார் பெருமையை இன்றளவும் பறைசாற்றுகின்றன.இவர்கள் உணவகத்தொழிலை பிறவித்தொழில் போல் பற்றிக்கொண்டதற்கு வேறொரு காரணமும் சொல்கின்றனர். நிலம் நீச்சுடன் ஆடம்பரமாக வாழ்ந்தபோது இவர்களைச் சுற்றி வேலையாட்கள்நிறைய. வீட்டில் 3 சமையற்கட்டுகள் இருக்கும். நெல் அவிக்க ஒரு அடுப்பு, வீட்டுக்காரர்களுக்கு ஒரு அடுப்பு, வேலைக்காரர்களுக்கு ஒரு அடுப்பு என 3 அடுப்புகளும் அணையாமல் எரியும். ஒவ்வொரு வீட்டிலும் சமையலுக்கு ஆள் அமர்த்தியிருந்தனர். அவர்களிடமிருந்து கற்ற வித்தையில் ஆந்திர நுட்பத்தைச் சேர்த்து கலவையான புதிய சமையல் முறையை படைத்ததாகவும் பெரியவர்கள் கூறுகின்றனர்.‘‘நாங்கள் சமையலறையில் கரண்டி பிடிக்கும் சாதாரணர் அல்ல... போர்முனையில் வாள் பிடிக்கும் சமரர்கள். பலர் நினைப்பது போல கிருஷ்ண தேவராயர் பின்னால் வந்தவர்கள் அல்லர். அப்போது வந்த ரெட்டியார்கள் தமிழகத்தின் வடமாவட்டங்களில்வசிக்கிறார்கள்.கார்காலத்தில் கோதாவரி, கிருஷ்ணா மலைப்பகுதியில் ஏர் பிடித்தவர்கள், போர்க்காலத்தில்மசூலிப்பட்டினத்தில் கூடாரம் அடித்த டச்சுபடைப்பிரிவில் சேர்ந்தோம். டச்சுக்காரர்கள்பின்னால் மருதநாயகத்தை எதிர்க்க கடல் வழியாக வந்தோம். அவரிடம் தோற்ற டச்சுக்காரர்கள்எங்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.நாங்கள் தூத்துக்குடி கடற்கரையோரமாக இந்தப் பகுதிக்கு வந்தோம்’’ என்று வரலாறு கூறுகிறார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெள்உவன்.இவர்கள் வாழ்ந்த கதையை விட தொழிலில் வளர்ந்த கதை இவர்கள் கைப்பக்குவத்தைப் போலவே சுவையானது. அனைவருமே ஓட்டல் தொழிலில் இருந்தாலும் பெண்களை ஈடுபடுத்துவதில்லை. காய்கறி கொள்முதல், சமையல், பரிமாற்றம் என அனைத்து வேலைகளையும் அந்தஸ்து பாராமல் சொந்த பந்தமே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறது.ரெட்டியார் ஓட்டலில் வற்றல் குழம்பும் அவியலும் பிரசித்தம். காஸ்ட்லி கல்யாணத்தில் நாம் வடை, பாயசம் போடுவோம். அவர்கள் சுடச்சுட அல்வா கொடுக்கிறார்கள். காய்கறியுடன் பருப்புக்கு பதிலாக பச்சரிசிசேர்த்து செய்யும் கம்ம கூர (கூட்டு), மிளகாய் பொடி விரவிய மசாலுடன் புளியைக் கலந்து காய்கறி வெட்டிப்போட்டு இறக்கும் மிரப்படி புலுசு, பச்சரிசி வெல்லம் சேர்த்த அக்காரை போன்றவை இவர்களின் ஸ்பெஷல் அயிட்டங்கள்.ஸ்வீட் ஸ்டால், பேக்கரி தொழிலிலும் விறுவிறுவென முன்னேறி, சைவ சமையல் சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளாக அரசோச்சிய இவர்களுக்கு சமீபகாலமாக அதிரடியான அதிர்ச்சி. போட்டிகள் பெருகிவிட்டதால், தமிழக ஓட்டல் தொழிலில் இவர்களின் பங்களிப்பு குறைந்துவருகிறது. கண்முன்பே தாங்கள் சேர்த்த பெருமை குலையும் கவலையில் 36 ஊர் ரெட்டியார்களின்பெருந்தலைகள் உள்ளனர்,

Wednesday, 5 February 2020

Brahmins

*POOR BRAHMINS*

It is amazing to see that how fiction can become truth in course of time!

Let's examine truth based on facts and real history. 

1. To start with, there is no SINGLE Brahmin God in Hinduism!

2. All Gods are from backward castes, dalits and tribals.

3. Brahmins never created the concept of Gods in Hinduism. 

4. There was not even a SINGLE Brahmin King that ruled India.

5. To be able to oppress others requires positions of power. Brahmins were teachers, scholars, priests, advisors but not rulers.

6. The Brahmin’s traditional occupation was that of temple priest (purohit), officiating religious functions. Their sole income was Biksha (alms) given by the land-lords (non-Brahmins).

7. And another section of Brahmins were teachers, that too without salary.

8. Vedic literature was mostly written by non-Brahmins! The most powerful of the dharma shaastra, that gives Brahmins a high status, is the Manusmriti written by Manu, a non-Brahmin.
Brahmin means a profession (Varna) - not a caste.

9. If the reading and writing of Sanskrit was confined to Brahmins then how do you have the tribal Valmiki composing Ramayana? Ved Vyas, who classified four vedas and wrote Mahabharata, was born to a fisher-woman.

10. Sanskrit was used mostly by non-Brahmin writers - there are very few scriptures in Sanskrit authored by Brahmins.

11. We consider the teachings of Ved Vyas, Vashishtha, Valmiki, Krishna, Rama, Agasthya, Vishwamitra, Shrunga, Gowthama, Buddha, Mahavira, Tulsidas, Thiruvalluvar, Kabir, Vivekananda, Gandhi, Narayana guru etc as most valuable.

12. If none of them were Brahmins why cry out loudly that "Brahmins did not allow you to learn?" There are numerous works on bhakti by non-Brahmin bhakti saints.

13. Brahmins never prevented others from learning.

14. Brahmins were neither rich nor powerful at any point of time in history. Pick up any old Indian story book, you will see ‘Garib Brahmin’ (Poor Brahmin) quoted as a virtue. (Remember Kuchela-Krishna story?)

15. Though their profession was considered as highest stature of the society, the Brahmin ascetics' only way of survival was alms given by people.

16. The biggest contribution of Brahmins is sustaining the best language ever spoken in the earth - Sanskrit. If you learn English or Arab, you have commercial benefits.

17. Nobody ever promoted Sanskrit.
Without any benefits, Brahmins took up voluntary task of learning Sanskrit. Then, now you accuse them of monopoly in Sanskrit!

Besides, Brahmins were never , they were not Kings.. They didn't enjoy powers and wealth.. Naturally, they worked hard on gaining knowledge, led life of austerity.. So there is no question of exploitation by Brahmins.. 
When population of Brahmins range from just 2% in Tamilnadu to 12 %in Uttarakhand how can they dominate majority.. 

After reading all this can anyone blame Brahmins for anything !!

Saturday, 1 February 2020

கள்

மருத்துவ குணம் கொண்ட பானத்தை வருடத்தில் ஒரு முறையாவது குடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்,,, 
#ஒரு மரத்துக் #பனங்கள் குடித்தால்
அடி மரமாய் உடம்பு வரும் !
#பனை மரத்துக் #கள் குடித்தால்
கட வெலும்பும் இரும்பாகும் !

கள் நமக்குச் சுகமளிக்கும் !
வெள்ளை ரத்தம் – அந்தக்
#கரும்பனையும், தென்னையும் நம்
கழனித் தெய்வம் !

#கள் குடித்துக் #கெட்டாரைக்
கேட்ட துண்டா?
கள் குடித்துச் #செத்தாரைப்
பார்த்த துண்டா?

#எலும்புறுக்கி நோய் தீரும்
தென்னங் #கள்ளால் !
எரிசூட்டு நோய் தீரும
#பனையின் கள்ளால் !

அதிகாலைக் #கள் கடித்தால்
அச்சம் போகும் !
அந்திக் #கள் குடித்தால்
ஆயுள் நீளும் !

#தாகம் எடுக்கையிலே
தமிழ்க்கிழவி அவ்வை
#கள்ளை அருந்தித்தான்
களிப்போடு வீற்றிருந்தாள் !

கடையேழு #வள்ளல்களும்
கவிஞர்கள் எல்லோர்க்கும்
#கள் விருந்து கொடுத்தன்றோ
கௌவரம் செய்தார்கள் !

வில்வேந்தர் வேல்வேந்தர்
வீரவாள் வேந்தர்
#கள்ளை அருந்தியன்றோ
கட்டுடம்பு வளர்த்தார்கள் !

#சித்தர்கள் நமக்குச்
சீதனமாய் கொடுத்த
முத்தனைய கள் வேண்டி
முழக்கம் செய்திடுவோம் !

விருந்தாகி #மருந்தாகி
விடிகாலை உணவாகி
#விவசாயி வாழ்க்கையிலே
வருமானம் வழங்குகிற
வரம் கொடுக்கும் தேவதைகள் !

அளவான #போதை
அளிக்கும் பொருளென்றால்
அருந்தலாம் என்று
அரசியல் சாசனமே
அதிகாரம் தருகிறது!

அளவான #போதை
அளிக்கின்ற #கள்ளை
ஏனருந்தக் கூடாது!
ஏனிறக்கக் கூடாது!

Friday, 31 January 2020

உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி

உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி
"முதல்வர்களின்
 °°°°°°°°°°°°°°°°°°°°
முதல்வர்"
°°°°°°°°°°°°
"உத்தமர் ஓமந்தூர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ராமசாமி ரெட்டியார்"
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அவர்களின்
 °°°°°°°°°°°°°°°
125வது பிறந்தநாள் "  2020-02-01
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔹எளிமையின் கம்பீரம்.
🔹எதையும்
     வெளிப்படையாகப்
     பேசும்
     துணிச்சல்காரர்.
🔹சிறந்த எழுத்தாளர்.
🔹ராஜதந்திரி.
🔹சமூக சேவகர்.
🔹நேர்மையும்,
     துணிச்சலும் மிக்க,
     கறைபடாத
     அரசியல்வாதி.
🔹ஊழலுக்கு
     எதிரானவர்.
🔹விவசாயிகளின்
      துணைவன்.
🔹உண்மையான
     அரசியலுக்கு
     உதாரணபுருஷன்.
🔹நடத்தையில் எளிமை.
🔹தேசியமும்,
     தெய்வீகமும் இவரது
     வழி.
🔹ஆதிதிராவிட நலத்
     துறையின் தந்தை.
📌
ஆதிதிராவிடர்கள், ஹரிஜனர்கள் என அழைக்கப்பட்ட அந்தக் காலத்தில், அவர்களுக்கென்று தனித்துறை இல்லை. தொழிலாளர் நலத் துறையின் ஒரு பகுதியாகவே ஹரிஜன நலத்துறை இருந்தது.
ஓமந்தூரார் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அந்தத் துறையை ஆதிதிராவிடர் நலத் துறை எனப்பெயர் மாற்றம் செய்து, தனித்துறையாகப் பிரித்து, அந்தத் துறைக்கென தனியே ஒரு ஆணையரை நியமித்தார்.
📌
கோயில் நுழைவு அதிகாரச் சட்டம் இயற்றி
தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை பெற்றுத்தந்தவர்.
📌
ஆதிதிராவிடர்கள் ஆலயத்தில் பிரவேசிக்க வைத்த பெருமைக் குரியவர்.
📌
சென்னை மாகாணத்தில் இருந்த, திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க வைத்ததோடு நிற்கவில்லை. திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான  திரு.குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது தனித்துவமிக்க ஒரு சாதனையாகும்.
📌
அரசாங்க நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதி திராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நடைமுறையை அரசாணையாகப் பிறப்பித்தவர்.
📌
ஜமீன், இனாம்தார் முறைகளையும் இவர் ஒழித்தார்.
📌
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டவர்.
📌
ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தவர்.
📌
பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவர்.
📌
தேவதாசி முறையை ஒழித்தவர்.
📌
தனது கட்சிக்காரர்களுக்கோ, தனது  குடும்பத்தினருக்கோ எந்தவிதச் சிறு சலுகைகளோ, முன்னுரிமையோ,  வேலைவாய்ப்புகளோ வழங்காத
உத்தமர்.
📌
பதவி விலகிய அன்று பிற்பகல் மூன்று மணிக்கே அரசுக் குடியிருப்பான கூவம் மாளிகையிலிருந்து வெளியேறி, ஓமந்தூர் சென்றுவிட்டார்.
📌
பதவி பறிபோகும் கடைசித் தருணங்களில் அரங்கேறும் ரகசியக் கையெழுத்து நாடகங்கள் எதுவும் இல்லாத எளிய நிகழ்வாக அமைந்தது அது.
📌
பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடைபோட்ட முதல் முதலமைச்சர்.
📌
மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார்.
📌
விவசாயிகளின் முதல்வர்.
📌
கிணறு வெட்ட மானியம்.
📌
ஊற்று நீர்ப்பாசனம்.
📌
நெல்லுக்குத் தரவாரியாக விலை நிர்ணயம்.
📌
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமைத்தது,நெல்,கரும்பு விலையை உயர்த்தியவர்.
📌
பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்தவர்.
📌
சாலை ஓரங்களில் புளியமரம், இலுப்பை மரம், அரசமரம், ஆலமரம் போன்ற மரங்களை நடச் செய்தவர்.
📌
இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக சென்னை மாகாண பிரதமர் என்ற முறையில் கொடியேற்றிய பெருமைக்குரியவர். 
📌
கிராமவாசி ஒருவர் தன் தியாகத்தாலும், உழைப்பாலும் சென்னை மாகாண முதல்வராக பதவியேற்று  கிராமத்தார்களும் பெரிய பதவிகளை
அடையமுடியும் என  கிராமங்களுக்கு  பெருமை சேர்த்தவர்.
📌
ஓமந்தூராரின்  அவர்களின் நினைவு நேர்மை, சத்தியம், ஒழுக்கம் இவற்றோடு இணைந்தே மனதில் நிற்கிறது.
வாழ்க ஓமந்தூரார் புகழ்!
📌
முதல்வர்களின் முதல்வரே!
தங்கள் பிறந்தநாளில் வணங்கி வேண்டுகிறோம்...
தாங்கள் மீண்டும் பிறந்து வாருங்கள்....
அரசியலை தூய்மை படுத்தி மக்களை காப்பாற்றுங்கள்!!
📌
தங்களை போற்றி வணங்கும்,
வி.ஆர்.சிவராமன்,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்,
முன்னாள் மாவட்ட தலைவர்,
காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி.